வெள்ளி, 18 மார்ச், 2011

ஜப்பான் சுனாமியும் 123 ஒப்பந்தமும்

கடந்த சில வாரங்களாகவே ஜப்பான் சுனாமி+பூகம்பம் உலகத்தையே கதிகலங்க செய்திருக்கிறது.மார்ச் 11 இல் தொடங்கிய இந்த கோர அழிவுப்படலம் சுனாமியோடு நில்லாமல் தொடர்ந்து பூகம்பமாக ஜப்பானை அதிர செய்தது.இதனால் ஏற்பட்ட விளைவு அதிபயங்கரமானது மட்டுமல்ல உலகத்திற்கே ஒரு பாடம்.
           புகுஷிமாவில் உள்ள  நாலு அணு உலைகள் ஒன்றன் பின் ஒன்றாக செயல் இழந்தது.அதாவது அணு உலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது எப்படியெனில் முதலில் அணுப்பிளவு  (Nuclear fission) பற்றி பாப்போம்.அணு பிளவிற்கு  மிக்கிய தேவை எரிபொருள்.அது யுரேனியம்  அல்லது தோரியம்(அனால் தோரியத்தை நேரடியாக பயன்படுத்த முடியாது).
இப்போது யுரேனியத்தை  பற்றி பார்ப்போம்.யுரேனியம் தங்கம் போல மைனிங் செய்து எடுக்கபடுகிறது.எங்கெல்லாம் யுரேனியம் கிடைக்கிறது என்பதை குறிக்கும் படம் கீழே:
                                        

மிக பெரிய அளவில் சுரங்கம் மூலம் தோண்டினாலும் அதிகபட்சம் ஒரு கிலோ யுரேனியம் கிடைத்தால் அதிகம்.அவ்வளவு அபூர்வமானது இது.
          கடல் நீரிலும் யுரேனியம் உள்ளது ஆனால் அது மிக மிக குறைந்த விழுக்காடு.அது அவ்வளவு லாபகரமானதல்ல(ஆம் கார்பரேட்டுகள் குப்பையை கிளறினால் கூட அதில் தங்களுக்கு எவ்வளவு  லாபமென பார்த்துதான் செய்வார்கள்)
          தோரியம் கூட எரிபொருளாக பயன்படுத்தலாம்.ஆனால் அது அதற்கு முன் Transmutation அதாவது அது யுரேனியமாக  மாற்றப்பட்டே பயன்படுத்தப்படும்.
          இந்தியாவில் தோரியம் அதிகமாக கிடைக்கிறது.ஆனால் மன்மோகன்  சிங் அமெரிக்க காலடிகளை தழுவி  யுரேனியம் வாங்குவேன் என பிடிவாதம் பிடித்தது வேறு விஷயம்.அதை பற்றி பின்பு பார்ப்போம்.
          இப்போது யுரேனியத்தை  யுரேனிய கனிமத்திலிருந்து (Uranium ore) பிரித்தெடுத்து பின்னர் பொடியாக்கி எரிபொருள் குழாயில்(Fuel rods) நிரப்புவர்.
இப்படி  பல  குழாய்கள்  Reactor core இல் பதிப்பார்.இரு எரிபொருள் குழாய்களுக்கிடையே  தடுப்பு குழாய்கள் பொருத்தப்படும் .
            இந்த தடுப்பு குழாய்களின் பணி  என்னவெனில் அணுப்பிளவு மூலம் வெளிப்படும் வெப்பத்தின் அளவை குறைக்க அல்லது அதிகரிக்க அல்லது நிறுத்த(முழுவதுமாக அல்ல).இந்த தடுப்பு குழாய்களை முழுவதுமாக இறக்கி விட்டால் அணுப்பிளவு முழுவதுமாக நிற்காது.வெப்பம் வெளிப்பட்டு கொண்டுதானிருக்கும்.ஆனால் சிறிய அளவில்.முழுவதுமாக இந்த தடுப்பு குழாய்களை  மேலேற்றிவிட்டால் அணுப்பிளவு முழு வீச்சில் நடைபெறும்.அதிக பட்ச வெப்பம் வெளிப்படும்.(1,000,000,000-watt light பல்பு எரியும் பொது வெளிப்படும் வெப்பத்தின் அளவை இந்த வெப்பம் ஒத்திருக்கும்)
             இப்போது இந்த reactor core வழியே குளிரூட்டும் திரவம் செலுத்தப்படும்.அதனால் இந்த அணுப்பிளவின் வெப்பத்தை அந்த குளிரூட்டும் திரவம் வாங்கிகொண்டு வெளியேறும்.இப்போது அந்த குளிரூட்டும் திரவம் வெப்பமாக(ஆவியாக) வெளியேறும்.அது ஒரு தண்ணீர் கொதிகலனில் நுழையும்.
             குழாய் வழியாக கொதிகலனில் நுழையும் சூடான(ஆவியாகிவிட்ட) குளிரூட்டும் திரவம் தன் வெப்பத்தை தண்ணீருக்கு அளிக்கும்.அதனால் அந்த தண்ணீர் ஆவியாகி அந்த ஆவி நீராவி டர்பைனில் செலுத்தபடும்.அதனால் அந்த டர்பைன் சுழலும்.அந்த சுழற்சி மின் உற்பத்தி ஜெனரேட்டருக்கு மாற்றப்பட்டு மின் சக்தி கிடைக்கும்.
அந்த நீராவி மீண்டும் தண்ணீராக குளிர்விக்க பட்டு மீண்டும் கொதிகலனுக்கு அனுப்பப்படும்.


                 
    இது மொத்த அணுமின் உற்பத்தியை விளக்கும் படம்.

        இப்போது இதில் என்ன பிரச்சனை என கேட்கலாம்.இப்போது அந்த எரிபொருள் குழாயில் நடந்த அனுப்பிளவினால் அணுக்கழிவு ஏற்படும்(அது விளக்கமாக வேண்டாம்.தலை சுற்றும்!!)
              இப்போது அந்த அணுக்கழிவை வெகு சீக்கிரம் ஒழித்து கட்டிவிட (Dispose)முடியாது.அதை பூமியிலோ ஆழமாக போர் தோண்டுவதுபோல தோண்டி அதில் இறக்கி மூடிவிட வேண்டும்.இதனால் அபாயமும் உண்டு.அப்புறம் மிச்சமிருக்கும் சில அணுக்கழிவுகள் கடலில் விடப்படுவதும் உண்டு(கல்பாக்கம் உதாரணம்) இதனால் மீன்கள் அழிந்து மீனவர்கள் கையேந்தும் நிலை ஏற்படும்.அது மட்டுமன்றி அந்த சுற்று வட்டார பகுதியில் வசிப்பவர்களுக்கு அந்த அணுக்கதி வீச்சினால் (என்னதான் கான்க்ரீட் மற்றும் ஸ்டீல் கொண்டு அணு பிளப்பானை மூடி பாதுகாத்தாலும்) பாதிப்பு ஏற்படும்.
               இதை கல்பாக்கம் பகுதியில் வசிக்கும் மக்கள் வெகு காலமாக அனுபவித்து வருகின்றனர்.இந்த கதிர் வீச்சு மற்றும் அணுக்கழிவுகளை சரியாக டிஸ்போஸ் செயாதது(செய்தாலும் பாதிப்பு உண்டு) போன்றவற்றால் குறைந்த கால மற்றும் வெகு நீண்ட கால பாதிப்புகள் ஏற்படும்.கேன்சர்,மலடாதல்,குழந்தை ஊனமாக பிறத்தல், கைகால் உருமாறி விடுவது என பல பின்விளைவுகள் ஏற்படும்.
             இப்போது ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால் புகுஷிமாவில் உள்ள நான்கு அணு உலைகளில் குளிரூட்டும் இயந்திரம் வேலை செய்யாமல் போய்விட்டதால் அணுபிளப்பான்(Reactor core) வெகுவாக சூடாக்கி வெடித்து விட்டது.இதனால் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த சுற்றுவட்டார மக்கள் வெளியேற்ற படுவதும் பல ஆயிரம் மக்கள் தாங்களாகவே பயந்து உயிரை காப்பாற்றி கொள்ள டோக்யோவை விட்டு வெளியேறி இருக்கின்றனர்.இது இரண்டாம் உலகப்போருக்கு பின (ஹிரோஷிமா நாகசாகி போல) ஜப்பான் சந்திக்கும் பேரழிவு என ஊடகங்கள் விமர்சிக்கின்றனர்.
           அணுமின் உற்பத்தி தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் ஜப்பானுக்கே  இந்த நிலைமை எனில்  இப்போதுதான் வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகள் எத்தகைய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்பது சொல்லி விளங்கவேண்டியது  இல்லை.
         அதுவும் இந்தியாவில் மும்பை,கல்பாக்கம்.மற்றும் இப்போது வரவிருக்கும் கூடங்குளம் அணு உலைகள் அனைத்தும் கடலோரம் இருப்பது பேராபத்து.ஜப்பானை ஒப்பிடுகையில் நம் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி அதிகம்.,அதுவும் கடலோரம்.அதனால் சுனாமி அல்லது பூகம்பம் ஏற்படுமெனில் தமிழ்நாடு முழுமையும் பாதிக்கப்படுமென சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்.ஆனால் வழக்கம் போல மத்திய அரசு நம் அணு உலைகள் பாதுகாப்பாக உள்ளன என்றும் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லையென்றும் "வழக்கம் போல " அறிவித்திருக்கிறது.
           போபால் விஷ வாயு விபத்து நடந்து 26 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான நிவாரணம் வழங்காமலும் இந்த விபத்திற்கு காரணமான அமெரிக்க யூனியன் கார்பைட் நிறுவன அதிபர் வாரன் ஆண்டர்சன்னோ அல்லது அந்த நிறுவன பொறுப்பாளர்கள் யாரும் இது வரை தண்டிக்க படவில்லை என்பது ஊரறிந்த ஒன்று.அது மட்டுமன்றி போபால் விஷ வாயு விபத்து நடந்த உடன் வாரன் ஆண்டர்சன் தனி விமானம் மூலம் அமெரிக்கா அனுப்பி வைத்த "அமெரிக்க அடிவருடிகள்" ஆட்சி செய்யும் காலமிது.ஒரு வேலை  அணு உலை விபத்து ஏற்பட்டால் இந்திய அரசின் அமெரிக்க அல்லது ரஷிய  விசுவாசம் சொல்லி விளங்க வேண்டியதில்லை.
             இரண்டு லட்சம்  கோடி ஊழலையே ஒன்றுமே நடக்கவில்லையென  சப்பை கட்டு கட்டியவர் கபில் சிபல்.அணு விபத்து ஏதும் ஏற்படின் அவரின் நடவடிக்கை காரி முழியும் அளவிற்கே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
     இடதுசாரிகளோ  அமெரிக்க அணு ஒப்பந்தத்தை மட்டும் எதிர்ப்பார்.ஆனால் ரஷிய அணு உலைகள் பற்றி வாய்திறக்க மாட்டார்.ஆனால் எல்லா அணு உலைகளும் ஆபத்தானவையே.இதை அவர்கள் உணரவில்லை.  
           அமெரிக்காவில் வசிக்கும் ,எப்போதாவது இந்தியா வந்து செல்லும் (பெயரளவில்) இந்திய பிரதமரான மனமோகம் சிங் நம் மின்சார தேவைக்கு அணு மின் உற்பத்தியே சிறந்தது என வக்காலத்து வாங்கியதோடு(நம் நாட்டில் மின் உற்பத்தியில் வெறும் மூடரு விழுக்காடே அணு மின் உற்பத்தி.அதிக பட்சம் முப்பது வரை செல்லலாம்.,அதற்கும் முப்பது ஆண்டுகள் ஆகும்.ஆனால் இது பற்றி யாரும் வாய்திறக்க காணோம்.) பிடிவாதமாக தன ஆட்சியே போனாலும் பரவாயில்லையென சூளுருத்து 123 ஒப்பந்தத்தை நிறைவேற்றினார்.அந்த ஒரு விஷயம் தவிர சிங்கிடம் அதே அளவு வேகம் உறுதி வேறு விவகாரத்தில் துளியும் காணப்படவில்லை.(என்ன இருந்தாலும் அமெரிக்காவிடம்  உள்ள எசமான விசுவாசம் மற்றவற்றில் வருமா?).மேலும் இடது  சாரிகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து தன ஆதரவை திரும்ப பெற்று கொண்டபோது பெரும்பான்மை கிடைக்க மற்ற கட்சி எம்பிக்களுக்கு பண பட்டுவாடா செய்ததென விக்கிலீக்ஸ்  உண்மையை போட்டுடுடைக்க இது நாடாளுமன்றத்தில் பூதாரகரமாகிவிட்டது.சரி இதை விடுவோம்.
          இத்தனை ஆர்பாட்டம் களவாணித்தனம் செய்து நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தம் எந்த விதத்திலேனும் இந்தியாவிற்கு பயனுண்டா என்றால் இல்லை என்ற பதிலே வரும்.அப்புறமெதற்கு இந்த ஒப்பந்தமென கேட்க கூடாது.எல்லாம் அமெரிக்க நிறுவனங்கள் தங்களிடம்  உள்ள இற்று போன அணு உற்பத்தி எந்திரங்களை நம் தலையில் கட்டதான்.மேலும் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அந்த நிறுவனகள் 500 கோடி கொடுத்தால் போதுமென ஒரு மசோதா வேறு தாக்கல் செய்யப்பட்டது.இதன் மூலம் மத்திய காங்கரஸ் அரசு எந்த அளவுக்கு அமெரிக்க அடிவருடியாக இருக்கிறதென புரிந்து கொள்ளலாம்.
       எனவே இப்போது செய்ய வேண்டியது இருக்கும் அணு உலைகளை மூட வேண்டும்.அதற்கு பதில் மரபுசாரா வழிகளில் மின்உற்பத்தி (Non conventional methods) செய்ய அரசு முயற்சிக்க வேண்டும்.இந்தியாவில் அபரிதமாக கிடைக்கும் சூரிய சக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யலாம்.மேலும் வீட்டுக்கு வீடு இலவச டிவி போன்ற உருப்படியில்லாத திட்டங்களை ஒழித்து விட்டு வீட்டுக்கு வீடு சூரிய மின்கலங்களை (Solar panels) வழங்கலாம்  .தன வீட்டு பயன்பாட்டுக்கு போக மீதமிருக்கும் மின்சாரத்தை அரசுக்கு கிரிட் (Grid) மூலம் செலுத்தி அதற்கு பணமும் பெற்றுக்கொள்ளும் வசதியை அரசு ஏற்படுத்தலாம்.மேலும் சூரிய அடுப்பு சூரிய கொதிப்பான்  போன்றவற்றை பயன்படுத்த ஊக்குவிக்கலாம்.
           இது போக மரபுசார எரிசக்தி மற்றும் மின் உற்பத்தி ஆராய்ச்சியை அரசு ஊக்குவித்து சிறப்பாக செயல்படும் தனிநபரோ அல்லது நிறுவனங்களுக்கோ உரிய அங்கீகாரம் வழகலாம்.இத்தகைய நடவடிக்கை மூலமே நாம் நம் மின்தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியுமே  ஒழிய மிகவும் செலவு பிடிக்க கூடிய மற்றும் சில பத்து வருடங்கள் மட்டுமே செயல் படும் மேலும் சுற்றுவட்டார பகுதி மக்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்க கூடிய அணு உலைகளை ஏற்படுத்துவதன் மூலம் நாம் "சொந்த செலவில் சூனியம்" என்பது போன்ற  ஒரு நிலையிலேயே நாம் இருக்கிறோம்.இதை மக்களும் அரசும் உணர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக