வியாழன், 11 நவம்பர், 2010

சுனாமியான அலைகற்றை விவகாரம்(ஊழல் பாகம் இரண்டு!)

என்னடா இவன் ஊழல் பாகம் ஒன்று, இரண்டு என வரிசைப்படுத்தி  சொல்கிறான் என நினைக்க வேண்டாம்.நம்ம "சனநாயக" இந்தியாவில் முடியாத பாகங்கள் பல உண்டு.
அவற்றை தொகுத்தால் இந்த வலைப்பூவே  இடம் காணாது போல!!!
சரி இப்போ அந்த அலைகற்றை ஊழல் விவகாரத்திற்கு வருவோம்.
எதிர்கட்சிகள் கடந்த சில ஆண்டுகளாக காட்டுக்கத்தல்    நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும்  , மேலும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போதும் இந்த அலைகற்றை ஊழல் பற்றியும் அதில் ராசாவின் பங்கு பற்றியும் பத்தி பதியாக பேசியும் எழுதியும் வந்த போதும் காங்கிரஸ் அரசு அதை கண்டுகொள்ளவில்லை.(மக்களும் தான்!.பின்ன  2009 இல் இவர்கள் மீண்டும் மத்தியில் ஆட்சி பிடித்திருக்க முடியாது)
இப்போ ஊழல் சீசன் போல!!!
ஐ பி எல் ஊழல் காமன்வெல்த்  மற்றும் ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டம் என வரும் செய்திகள் அனைத்தும் ஊழல் மயமான இத்தகைய நேரத்தில் இந்த அலைகற்றை ஊழல் மீண்டும் சுனாமியாகி ஆட்சியாளர்களை தாக்கியிருக்கிறது.
இந்த அலைகற்றை ஊழல் விவகாரத்தை பெரும்பாலான  தமிழ் பத்திரிகைகளும் தொலைகாட்சிகளும் மழுங்கடித்து(பிரபுதேவா நயன்தாராவுடன் ஓடிப்போன விஷயத்தை பெரிதாக போடுவர் .ஆனால் இத்தகைய ஊழல் விஷயங்களை மறைத்து அல்லது ஆட்சியாளர்களால் மறைக்கப்பட வைக்கப்பட்டன) விட்டன.

அலைகற்றை என்பது நாட்டின் சொத்து.அதை ஏல முறையில் நிறுவனங்களுக்கு விற்காமல் முதலில் வந்தோருக்கு முன்னிரிமை என விற்கப்பட்டது.இதனால் அதுவரை செல்பேசி வியாபாரத்திலேயே ஈடுபடாத unitech , swan போன்ற நிறுவனங்கள் இந்த அலைகற்றையை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு வேறு நிறுவனங்களுக்கு விற்று விட்டன.
  இப்படி செய்ததால் அரசுக்கு இழப்பு 1,76,379 கோடியாம்.மத்திய தணிக்கைதுறையின் (Comptroller and Auditor General)அறிக்கையிலேயே இது குறிப்பிடபட்டிருக்கிறது.


எதிர்கட்சி   தலைவி  வெளியிட்ட  ஒரு  அறிக்கையில்  வெள்ளைக்காரன்  நம்மை  ஆண்ட  பொது  கொள்ளையடித்தது  வெறும்  தொள்ளாயிரம்  கோடிதானாம்!  இதை படிக்கும் பொது பெரியார் கூறியது நினைவுக்கு வந்தது "இந்தியா சுதந்திரம் அடைந்த நாளை நாம் துக்க தினமாக கடைபிடிக்க வேண்டும்".

எதிர் கட்சிகள் மற்றும் நடுநிலையாளர்கள்  கூறுவது இந்த அலைகற்றையை குறைந்த நிலைக்கு ஏன் விற்க வேண்டும்?
மேலும் அரசிடம் அலைகற்றை வாங்கிய நிறுவனங்கள் வேறு யாருக்கும் விற்க கூடாது என அரசு தடை போடாதது ஏன்?
ஏன் ஏல முறையை பின்பற்றாமல் முதலில் வந்தோருக்கு  முன்னுரிமை என வழங்க வேண்டும்?
ஏன் செல்பேசி தொழிலில் ஈடுபடாத  நிறுவனங்களுக்கும் அலைகற்றை வழங்கப்பட்டது?
..........

இப்படி பல கேள்விகளுக்கு அரசு தரும் பதில்கள் வெறும் வெற்று மழுப்பல்களே."கூட்டணி தர்மமா?ஆல்லது கூட்டு கொள்ளை தர்மமா?" என தெரியவில்லை.
காங்கிரஸ் கூறுவது எங்கள் கட்சியில் யாராவது ஊழல் செய்தால் நாங்கள் நடவடிக்கை  எடுப்பது(போல் ) எடுப்போம்.ஆனால் ராசா தி மு க என்பதால் நடவடிக்கையை திமுக தலைமைதான் எடுக்க வேண்டுமாம்.(அது சரி நம்ம  "நிதி" அய்யாகிட்ட நீதி எதிர்பார்க்கலாமோ?)
மேலும் உச்ச நீதி மன்றமே(தேதி அக். 29 2010) இந்த ஊழல் விசாரணை எம்புட்டு காலம்தான்  நடக்கும் என கடுப்படித்தது. சிபிஐ தொலை தொடர்பு அலுவலங்களை ரெய்டு செய்தது .ஆனால் அத்தகைய நேரங்களில் நம்ம திமுக மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்டது  சொல்லி தெரிய வேண்டியதில்லை.

சமீப  செய்தி: கனிமொழி டில்லி சென்று பிரணாப் முகர்ஜியை சந்தித்து ராசா எந்த ஊழலும் செய்யவில்லை என கூறியிருக்கிறார்!அடங்கப்பா உங்களுக்கு பதவி வேனும்னாலோ அல்லது பதவி தக்க வைக்கவோ நீங்க டில்லி உடனே போவீங்க. ஆனால் இலங்கை தமிழர் விவகாரத்திலோ அல்லது தினம் தினம் செத்து கொண்டிருக்கும் தமிழக மீனவர் பற்றியோ வெறும் கடிதம் மட்டுமே எழுதுவீங்க.புல்லரிக்குது உங்க மக்கள் சேவை!
அதாவது நம்ம "உலகம் சுற்றும் முதியவர்", "எப்போவாவது இந்தியாவிற்கு வரும்" மன்மோகன்  சிங்  இன்று இந்தியா திரும்பிய உடன் ராசா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட உடன் மகளை டில்லி அனுப்பிவிட்டார் நம்ம தலிவர்!ஆஹா இதுவல்லவோ தமிழனுக்கு ஆற்றும் தொண்டு!
எவனாவது நூறு ஆயிரம் லஞ்சம் வாங்குவதை மட்டும் பிடிக்கும் நம்ம லஞ்ச  ஒழிப்பு துறை(அட நம்புங்க! அப்படி ஒரு துறை இருக்காமே!!) பெரிய ஊழல்வாதிகளையும் லஞ்சம் பெரும் பெரிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளையும் கைது செய்து நடவடிக்கை எடுத்ததாக சரித்திரம் இல்லை.
இப்போது காட்டு கத்தல் கத்தும் ஊடகங்கள் அடுத்த வாரத்தில் வேறு செய்தியை (உம். நடிகை குலுக்குஸ்ரீ வீட்டு நாய் நான்கு குட்டிகளை ஈன்றது!!!..இது பற்றி எமது அம்பத்தூர் செய்தியாளர் கூறும்போது....Blah blah) பிரதானமாக்கிவிடும் என்பதில் ஐயமில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக