திங்கள், 15 ஆகஸ்ட், 2011

ஆரண்ய காண்டம் தமிழ் சினிமாவுக்கு கட்டப்பட்ட பாடை!!

             தமிழ் சினிமா விமர்சனங்களை பார்த்தால் ஒன்று நன்றாக விளங்கும்.முதல் ரிவ்யூவை பொறுத்தே பின்னர் வரும் அனைத்து விமர்சனங்களும் அமைகிறது(அப்  கோர்ஸ் மாறுபட்டவிமர்சனங்களும் உண்டு).ஹிந்தி சினிமாவில் விமர்சனத்துக்கும் படத்தை மக்கள் ரசிப்பதற்குமான இடைவெளி முன்பெதுமில்லாது இப்போது மிக அதிகமாகிவிட்டது டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட பல பத்திரிக்கைகளிலும் விவாதிக்க பட்டது!!அதில் விமர்சனம் எழுதும் அறிவு ஜீவிகளின் ரசனை மக்களின் ரசனையை கருத்தில் கொள்ளாது இருப்பதாக சொல்லப்பட்டது!இன்ன பல காரணங்களும் உண்டு!
             ஆனால் அதே விவாதங்கள் தமிழ் சினிமாவுக்கும் பாந்தமாக பொருந்துகிறது என்பதை உணர்த்திய படம் ஆரண்ய காண்டம்!ப்ளாகரில் எல்லாரும் ஆஹா ஓஹோ வென புகழ்ந்து தள்ளப்பட்ட படம்!சிலர் தமிழ் சினிமாவுக்கு மஞ்சள் நீராட்டு என ஓவராக விளித்தனர் !!!ஏய்யா பருத்தி வீரன் சுப்ரமணியபுரம் எல்லாம் வந்தபோதும் இதே தான சொன்னீங்க?எம்புட்டு தபா தமிழ் சினிமாவுக்கு மஞ்சள் நீர்?ஒருவேளை ovulation problem ஆ?எதுக்கும் ஒரு நல்ல Gynecologist கிட்ட தமிழ் சினிமாவ காட்டுங்க!!
             படம் மொக்கையோ மொக்கை!!ஒவ்வொரு கதாபாத்திரமும் சாதாரண மனிதன் போல பேசுவதில்லைன்னு சபதம் செய்துதான் அட்வான்ஸ் மற்றும் கால்ஷீட் பேசியிருப்பாங்க போல!!சம்பத் மட்டுமே தனது அக்மார்க் குரலில் பேசுகிறார்(ரவி கிஷ்ணா கொரல பத்தி தனியா சொல்லனுமா?ஐயோ சாமி!!) மற்ற எல்லாரும் ஒன்னு அடி தொண்டையில் உறுமுகின்றனர் இல்லைன்னா கீச்சுன்னு கத்துறாங்க!
            வழக்கமான விஷயங்களை மாற்றி செய்தால் அதை உலகத்தரம் என்று சொல்ல சில சூடோ இன்டலெக்சுவல்கள்  (நன்றி ஆதவன்) வெறிகொண்டு அலைகிறார்கள்.அதென்ன உலகத்தரம் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு பண்பாடு கலாசாரம் மொழி இனம் அது இதுவென்று ஆயிரம் உள்ளது.இதில் எங்கு வருகிறது உலக தரம்?இதென்ன காரா?euro norm   barath  norm என்று சொல்ல?இசையை எடுத்து கொண்டால் அதென்ன உலக இசை?உலகத்தில் ஒவ்வொரு நாட்டின் இசை கருவியையும் ஒன்றாக இசைப்பதோ?இப்போது திரைப்படத்துக்கு வருவோம்!இதில் என்ன உலக தரம்?ஆஸ்கர் அமெரிக்காவின் அளவுகோல் கான்ஸ் ஐரோப்பிய நாடுகளின் சினிமாவை மையபடுத்தும் ஒன்று.உலக சினிமா எடுக்கிறேன் என்று ஏன் தமிழில் எடுத்து சாகடிக்கிரீர்கள்?சேகர் கபூர் போல ஆங்கிலத்தில் எந்த முயற்சியை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாமே?
        
          மற்ற நாட்டு படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு வியாதி என்னவெனில் ஒரு படம் பேரு வாங்குனா அதே போல அம்பது படம் வரும்!பருத்தி வீரன்(ஒரு சேவிங் பண்ண காசில்லாத குளிக்காத பன்னாடை அப்புறம் ஒரு தாவணி போட்ட பொண்ணு), சுப்ரமணியபுரம்(நாலு ஓதவாக்கரைகள் ஒரு தாவணி போட்ட பொண்ணு)   இப்படி எல்லா கருமாந்திரத்தையும் பாத்து சலிச்சு போச்சு!!இப்போ இதே ஆரண்ய காண்டத்தை போல அம்பது படம் எடுக்கப்படும்!!அப்போ இதே அறிவு ஜீவிகள் ஐயோ அம்மா ன்னு கூச்சல் போடுவார்(ஆமா நீங்க தூக்கி உடுறீங்க!!அனுபவிங்க!)
          படத்தின் முதல் காட்சியே மேட்டர் செய்வது.நான் என்னமோ அது கோஹினூர் காண்டம் விளம்பரம்னு நெனச்சுட்டேன்!!சிறு நீர் கழிப்பதையும்(இதற்கு முன்பே பல படங்களில்) காட்டி விட்டனர்!!அடுத்து மலம் போவதோ?சென்சார் அப்படின்னு ஒன்னு இருக்கா?இப்படி அருவருப்பான விஷயங்களை காட்டினாலே உடனே சில அறிவு கொழுந்துகள் ஆஹா ஓஹோ!!ன்னு சொல்வது இவர்கள் எத்தகைய அருவருப்பான மனதை உடையவர்கள் என்பது விளங்கும்!!இந்த அறிவு ஜீவிகளின் கக்கூசிலும் கேமரா வச்சி படமேடுக்கலாமே?!!
          மற்ற படி ஆரண்ய காண்டம் சரியான மொக்கை!!கெட்டவார்த்தை கேக்க நான் ஏன் படத்துக்கு போகணும்?கொழாயடிக்கு போனாலே போதுமே!!இப்படிதான் பொல்லாதவன் அப்படின்னு கொசு தனுசு நடிச்ச படம்  Bicycle Thieves படத்தின் அருவருப்பான பிரதி!ஏய்யா இந்த கொலை வெறி?வெற்றிமாறன் டுபுக்கு படத்தையும் எதிர்ப்பார்க்கும் சூடோ இண்டலெக்சுவல்கள் இங்கு உள்ளனர்!!ஐயோ ஐயோ!!
           அப்புறம் யுவன் சங்கர் ராஜா ஷெர்லாக் ஹோம்ஸ் படத்தின் ஹான்ஸ் சிம்மரின் இசையை வேறு சுட்டு ஆங்காங்கே பயன்படுத்துகிறார்!!இதான் உலக தரமோ?என்னவோ!!
           ஆனால் ஒன்று முடிவு செய்துவிட்டேன்.பட விமர்சனங்களை படித்து அதில் நல்லா இல்லை ன்னு சொன்னா ரொம்ப வசதியா போச்சு பாக்குற வேலை மிச்சம்!ஆஹா ஓஹோன்னா இனி பார்ப்பது பற்றி பரிசீலிக்கப்படும்!இந்த தெளிவை கொடுத்த விமர்சன அன்பர்களுக்கு நன்றியோ நன்றி!!உலக சினிமா உள்ளூர் சினிமா இந்த வேறுபாட்டை ஏற்று கொள்பவர்கள இலக்கியத்தில் மட்டும் தலித் இலக்கியம் பெண் இலக்கியம் ஆகிய வேறுபாட்டை நிராகரிப்பது ஏனோ?!!!என்னவோ பண்ணட்டும்  ஆளை விடுங்க.தமிழ் சினிம்மான்னாலே கடும் அலர்ஜி இருந்தது .இப்போது அது இன்னும் அதிகரித்து விட்டது!!
          அப்புறம் ஏதோ எல்லாரும் சொல்வதுக்கு மாற்று கருத்து சொல்வது நான் என்னமோ ஹிட்ஸ் வாங்க செய்ததாக நினைத்தால் எனக்கு கவலையில்லை!!இந்த ஹிட்ஸ்,இன்ட்லி,தமிழ்மணம்,பொறந்த நாளு நம்பர் ஒன ரேன்க் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையே இல்லை!!நான் நினைத்ததை சொல்லியிருக்கிறேன்.அம்புட்டுதேன்!


18 கருத்துகள்:

 1. சத்தியமா நான் எதிர்பார்க்கல!!நன்றி

  பதிலளிநீக்கு
 2. facebookலயும் லிங்க் குடுத்துட்டேன். It's a different perspective :-)

  பதிலளிநீக்கு
 3. its a different view abt the movie(மற்று கருத்துன்னு வேச்சுக்கலாம், நன்றாக உள்ளது)...

  பதிலளிநீக்கு
 4. "இசையை எடுத்து கொண்டால் அதென்ன உலக இசை?உலகத்தில் ஒவ்வொரு நாட்டின் இசை கருவியையும் ஒன்றாக இசைப்பதோ?
  யுவன் சங்கர் ராஜா ஷெர்லாக் ஹோம்ஸ் படத்தின் ஹான்ஸ் சிம்மரின் இசையை வேறு சுட்டு ஆங்காங்கே பயன்படுத்துகிறார்!!இதான் உலக தரமோ?என்னவோ!! "

  இதே கருத்தை நான் சாரு நிவேதிதா வுக்கு அனுப்பியிருந்தேன். பதிலுக்கு திட்டுதான் வந்தது.

  பதிலளிநீக்கு
 5. //பதிலுக்கு திட்டுதான் வந்தது. //

  ஹாஹ்ஹாஹ்ஹா . . . :-)

  பதிலளிநீக்கு
 6. its a different view abt the movie(மற்று கருத்துன்னு வேச்சுக்கலாம், நன்றாக உள்ளது)... ////
  .
  நன்றி
  ****
  இதே கருத்தை நான் சாரு நிவேதிதா வுக்கு அனுப்பியிருந்தேன். பதிலுக்கு திட்டுதான் வந்தது.
  .
  =)) ...நன்றி

  பதிலளிநீக்கு
 7. (ரவி கிஷ்ணா கொரல பத்தி தனியா சொல்லனுமா?ஐயோ சாமி!!)

  அண்ணா
  சப்பை னு காட்ட பட்ட கதாபாத்திரம் அப்படித்தானே இருக்கும் ! படம் எனக்கு பிடிச்சிருக்ணா !!

  பதிலளிநீக்கு
 8. ரசனைகள் மாறுபடும்.
  .
  .
  சப்பை னு காட்ட பட்ட கதாபாத்திரம் அப்படித்தானே இருக்கும்////...
  .
  சப்பை இல்ல சாதாரண கதாபாத்திரதுக்கே அவன் அப்படிதான் பேசுறான்!!கதாபாத்திரம் பத்தி சொல்லல!!

  பதிலளிநீக்கு
 9. எமது பிரச்சினை என்றால் எமது மனதை கவர்ந்த அல்லது பாதித்த பிறநாட்டு படங்களின் சாயலை OR பிரதிபலிப்பை எதிபார்க்கிறோம். அவ்வாறு இருந்தால் அது உலக தரமான படம் அல்லாது விடில் அது தரமற்ற படம் என முடிவு செய்து விடுகிறோம். அதைதான் நமது திரை விமர்சகர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
  French, கொரியன், Iran படங்கள் தமது நாடு மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டே படம் எடுக்கிறார்கள். இசையும் அவர்களது நாட்டு இசையை அடிப்படையாக கொண்டுள்ளது. அவர்கள் உலக திரைப்படம் என்று அமெரிக்க இசையை or லட்டின் இசையையோ பயன்படுத்துவதில்லை. உதாரணமாக
  (யாரவது ஒரு இசை அமைப்பாளன் நன்றாக இசை அமைத்தால் இழவு வீட்டுக்கு டூயட் tune போட்டிருப்பதாக புலம்புவார்கள்.
  பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன், ஐயனே, என் ஐயனே.” மேஸ்ட்ரோவின் குரலில் இந்தப் பாடலைக் கேட்கும் போது ஏற்படும் உணர்வு, அம்பானி அமிதாப் பச்சன் போன்ற கோடீஸ்வரர்கள் மும்பை விநாயகர் கோவிலுக்கு நேர்த்திக் கடன் செய்வதற்காக தங்கத்தால் ஆன பிச்சைப் பாத்திரம் ஒன்றை ஏந்திச் செல்வார்கள்; குருத்வாராவுக்குச் சென்று பக்தர்களின் செருப்புகளைச் சுத்தம் செய்வார்கள். (வருங்காலப் பிரதம மந்திரி ராகுல் காந்தி தலித் குடிசையில் ஓர் இரவு தங்கியதை நினைவு கூர்க). அம்மாதிரி பக்திப் பரவசக் காட்சிகளுக்கு வேண்டுமானால் மேஸ்ட்ரோவின் இந்தப் பாடல் பொருத்தமாக இருக்குமே ஒழிய, ரத்தமும் சதையும் நிணமும் சளியும் அழுகி ஒழுகும் பாலாவின் பிச்சைக்காரர்களின் வேதனைக் குரலுக்குப் பொருத்தமாக இல்லை.)

  ஆனால் ஆரண்யகாண்டம் திரைப்படத்தில் சண்டை காட்சியில் ஒரு காதல் tune i யுவன் போட்டதற்கு
  "ஒரு சண்டைக் காட்சியில் இப்படி ஒரு இசையை என்னுடைய உலக சினிமா அனுபவத்திலேயே கண்டதில்லை என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு கோஷ்டியிலும் இருபது பேர் என்று ஒருவரை ஒருவர் வீச்சரிவாளால் வெட்டிச் சாய்க்கும் ஒரு கொடூரமான சண்டைக் காட்சியில் லம்பாடா பாடலை நினைவூட்டும் ரொமாண்டிக் இசையைப் போட எவ்வளவு பெரிய இசையுணர்வும், சிருஷ்டிகர மனோபாவமும் வேண்டும் என்று வியந்து வியந்து போகிறேன். இதுவரையிலான தமிழ் சினிமா இசையில் யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்தில் செய்திருப்பது ஒரு புரட்சி என்றே சொல்லலாம்"

  இப்படியெல்லாம் புலம்புபவர்களை மன நோயாளிகள் என்று விட்டு தள்ளுவதா? அல்லாது சாம்பார் சாதத்தில் புரியாணி வாசனையை தேடும் பேர்வழிகளா என்று தெரியவில்லை.
  கொஞ்ச நாட்களாக தமிழ் சினிமாவின் சிறந்த இசை அமைப்பாளன் என்று பிரகாஷ் குமார் என்று சொல்லி திரிந்தார்கள். பின்பு பார்த்தால் அந்த பிரகாஷ் ஒரு copy cat பேர்வழி
  http://www.youtube.com/watch?v=zAWv2U8kKAY&feature=player_embedded
  http://www.youtube.com/watch?v=9aStAkXZ9kM&feature=player_embedded
  http://www.youtube.com/watch?v=ZmVRsXZD4nQ&feature=related
  http://www.youtube.com/watch?v=TXFY6THL7PI&feature=related
  http://www.youtube.com/watch?v=kkdEXk0aEmw&feature=related
  http://www.youtube.com/watch?v=AsNiDkZmFqU&feature=related

  பதிலளிநீக்கு
 10. @செந்தில்குமரன்
  ஜி வி பிரகாஷ் எல்லாம் ஒரு இசையமைப்பாலனே இல்லை!!தெய்வ திருமகள் படத்துலயும் ரெண்டு பாட்டு காப்பி!!
  அந்த மன நோயாளிகள் தூக்கி விட்டால் அது ஹிட இல்லைன்னா பிளாப்!!இப்படி ஒரு பொதுபுத்தியைதான் நான் கண்டித்திருக்கிறேன்!நன்றி.

  பதிலளிநீக்கு
 11. கடைசி மூணு வரிகள் தமாஸோ தமாஸ்!!! சாணிய மிதிச்ச மாதிரி சகட்டுமேனிக்கு எல்லாரையும் .. குறை கூறி பதிவு..போட்டால் அறிப்பு ஜீவின்னு.ஸாரு அறிவு ஜீவின்னு சில பேருக்கு நினைப்பு!!தமிழ் சினிமா அலர்ஜின்னா..அப்புறம் என்னா ...... க்கு அத பார்க்கணும் பின் வாந்தி எடுக்கணும்!!?

  பதிலளிநீக்கு
 12. @சாய்
  ஆமாம் ஹிட்ஸ்-க்காக பதிவு போடாதவர்கள் எத்தனை பேர்?இன்ட்லியில் ஒட்டு தமிழ்மணத்தில் ஓட்டுன்னு னார வேலை எனக்கு விருப்பமில்லைன்னுதான் சொன்னேன்.உனக்கு தமிழ் சினிமா பைத்தியம்னா எதுக்கு இங்க வந்து வாந்திஎடுக்குற?தமிழ் சினிமாவின் குறைகளை சொன்னால் ஏதோ தாங்கள் தான் அந்த படத்தை எடுத்தது போல சில சொறி பிடித்தவர்கள் அலைவது வினோதம்.சாய் பாபாவுக்கு சொரியாம் போய் சொறிஞ்சி விடு!!

  பதிலளிநீக்கு
 13. ஸாரு அறிவு ஜீவின்னு ///..
  .
  .
  அதை நீங்கள் சாருவிடம்தான் கேக்கணும்!!தவிர நான் ஒரு இடத்தில் கூட நான்தான் அறிவு ஜீவி என்றோ என்னை மற்றவர்கள் அறிவு ஜீவி என்று நம்பவைக்க போலியான கட்டமைப்புகளை உருவாகவோ நான் முயன்றதில்லை!அதில் எனக்கு விருப்பமுமில்லை!

  பதிலளிநீக்கு
 14. இந்த படமும் தழுவல் தானாமே.. http://castrokarthi.blogspot.com/2011/08/blog-post_16.html

  பதிலளிநீக்கு
 15. @Castro Karthi
  இந்த உண்மைய நாம சொன்னா உடனே நம்மேல பாய்வதற்கு ஒரு கூட்டமே திரியுது!!

  பதிலளிநீக்கு
 16. தமிழ்நாட்டுல விமர்சனமா எழுதுறானுங்க? இது இல்ல விமர்சனம்! அற்புதம் சார்!!

  பதிலளிநீக்கு