திங்கள், 22 ஆகஸ்ட், 2011

தமிழின விரோத "தி ஹிந்து" பத்திரிக்கையை மானமுள்ள தமிழர்கள் புறக்கணிப்பர்!!

   தி ஹிந்து பத்திரிகை போல ஒரு தமிழ் விரோத பத்திரிக்கை  ஆங்கிலத்தில் இல்லை!!ஆனா நம்மாளுங்க(குறிப்பா சென்னையில் இருப்போர்) அதை படிச்சாதான் டாய்லெட்டே வருது!! ரிட்டையர் ஆகி வீட்டில் மஞ்ச  பெயின்ட் அடிச்சி ஈசி சேரில்(நன்றி சுஜாதா) சாய்ந்து கொண்டு ஹிந்து படிக்காவிட்டால் அடுத்த கணமே நரகம் என்பது போல சீனியர் சிட்டிசன்கள் ஒருபுறம், இன்னொரு புறம் தமிழே தெரியாமல், தெரிந்தாலும் தெரியாத மாதிரி காட்டிக்கொண்டு இன்குலீசில் பேசும் பெண்கள் ஒருபுறம், மென்பொருள் அடிமைகள் மற்றொருபுறமென  ஹிந்துவை படிக்காவிட்டால் நாம் ஏதோ முட்டாள் என்பது போன்ற ஒரு  மாயையை உண்டாக்கி வைத்திருப்பது மானங்கெட்ட பொழப்பன்றி வேறென்ன?
                   ராஜபக்சே கையால் சிங்கள ரத்னா வாங்கிய தியாகி ஹிந்து ராம்!!அதெல்லாம் ஒரு பத்திரிக்கையா?ராஜபக்சேவின் பேட்டியை அடிக்கடி எப்படியாவது போட்டுவிடுவர்!!இரண்டு  வருடங்களுக்கு  முன் இந்த பத்திரிக்கையை படித்து கொண்டிருந்த பொது ராஜபக்சேவின் பேட்டி ஒரு முழு பக்க நீளத்துக்கு வந்திருந்தது!!அப்போது கிழித்து போட்டவன்தான்.இன்றுவரை நான் அந்த பத்திரிக்கையை  தொடுவது கூட இல்லை!! ராஜபக்சே பேட்டி மட்டுமல்ல சிங்கள ராணுவத்திற்கு விசுவாசமாக செய்தி போடுவதிலும் மேலும் ஈழ தமிழர்கள் அனைவரும் ஐந்து நட்சத்திர வசதிகளுடன் வாழ வைக்கப்பட்டுள்ளதாகவும் வாய் கூசாமல் பொய் சொல்லி கல்லா கட்டுவது இந்த பத்திரிக்கையின் பொழப்பு!!சுடுகாட்டில் அரசியல் செய்யும் பொழப்பு! மானமுள்ள சூடு சுரணையுள்ள தமிழர்கள் இதை செய்வார்கள் என்று நம்புகிறேன்!!

1 கருத்து:

  1. "மானமுள்ள தமிழர்கள்" இப்படி யாராவது இருக்காங்களா என்ன?நுனி நாக்கில் இன்குலீசு பேசும் "எனக்கு டமில் தெர்யாது" என்று சொல்லும் ஜந்துக்கள்தான் தமிழ்நாட்டில் உள்ளன!!

    பதிலளிநீக்கு