வியாழன், 25 ஆகஸ்ட், 2011

தமிழர்களின் முக்கிய கவலை: ஆரண்ய காண்டம் காப்பியாமே?

                  கடந்த சில மாதங்களாக ஆஹா ஆரண்ய காண்டம் போல ஒரு படம் ஒலக வரலாற்றிலேயே எடுக்கபட்டதில்லை!!ஒக்க மக்க எல்லார மூஞ்சியிலும் படத்தோட போஸ்டரை(அதில் எது  ஒட்டியிருந்தாலும்) தமிழ் சினிமாவை வசை பாடுபவனின் முகத்தில் தேய்க்க!!என்று படு "சாத்வீகமாக" மொக்கை படத்தை ஒலக சினிமா என கொண்டாடுவோர் சங்கம் அறிவுறுத்தியது!அதன்படி பலர் எங்கே தன முகத்தில் அந்த "எக்கச்சக்க" போஸ்டர்(அதில் எது  ஒட்டியிருந்தாலும்) தேய்க்கப்படும் என பயந்து ஆஹா அருமையான ஒலக சினிமா Eisenstein சமாதியில் இருந்து எழுந்து பாராட்டினார் என்கிறே ரேஞ்சுக்கு ஒரே அக்கப்போர்!இது நல்ல சினிமா இல்லைன்னு சொன்னா கொய்யால என்று அடிக்க வராத குறையாக எதிர்த்தோர் பலர்(ஆனாலும் இங்கு நான் படத்தை எதிர்த்து போட்டபோது அதை பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி :) ).
                இப்போ தமிழனுக்கு என்ன கவலைன்னா சிலர் இந்த ஆரண்ய காண்டம் ஏதோ ஒரு லத்தீன் அமெரிக்க சினிமாவின் உல்டா என கொளுத்திபோட ஐயோ வட போச்சே என வடிவேலு கணக்கா "வொய் ப்ளட்?சேம் ப்ளட்!!" என ஆறுதல் சொல்லிகினு திரியுறாங்க!!
               அதாவது இந்த படம் காப்பி அல்லது தழுவல்னா தமிழன் எல்லோரும் தலையை தொங்க போட்டுகனுமாம்!!ஆமா ஒன்றரை லட்சம் தமிழன் கொல்லப்பட்டான்!!ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவன் சாகடிக்கபட்டபோது, மூணு தமிழனை தூக்கு கயிற்றில் நிருத்தியுள்ளபோது தொங்காத  தமிழன் தலை இதுக்குதான் தொங்கனுமா?அட போங்கையா!!ஆரண்ய காண்டம் இல்லைன்னா அடுத்து ஒரு கிஷ்கிந்தா காண்டம் வராமலா போய்டும்?அப்போ அதை "இது வரை கண்டிராத ஒலக சினிமா" "தமிழ் சினிமாவை விமர்சிப்பவன் மூஞ்சியில பட போஸ்டர வச்சு தேய்!!" என்பது போன்ற ஆர்டர்களை அப்போ மீண்டும் கொடுக்கலாம்!!என்ன காதல்,வெயில்,பருத்தி வீரன்,சுப்ரமணியபுரம் இதெல்லாம் வரும்போது எல்லாரும் "இதான் ஒலக சினிமா இதுக்கு மேல எடுக்க ஒன்னியும் இல்ல" அப்படின்னு குத்தாட்டம் போடலியா?மனதை தளர விடாதீங்க!!ஒலக சினிமா என்கிற ரப்பர் ஸ்டாம்பை பத்திரமா வச்சிருங்க .அப்பப்ப வர படங்களுக்கு குத்திடுவோம்!!ஒலக சினிமா என சாப்பா குத்த சில  தகுதிகள் :
 • குளிக்காத பன்னாடைகள் இருக்கணும் 
 • சேவிங்  தவிர் (ரீசன்ட் ஆத்திச்சூடி)
 • அடிங்கோ....தா என்பது போன்ற மங்கள சொற்கள் வசனமாக நொடிக்கொருமுறை எல்லாராலும் சொள்ளப்படனும்.
 • ஒரு சிறுவன் அல்லது சிறுமி வயசுக்கு மீறி பெனாத்தனும்(அவர்களும் கெட்ட  வார்த்தை பேசினால் ஒலக சினிமா முத்திரை இன்னும் அழுத்தமாக குத்தப்படும்!!).
 • தவிர கக்கூஸ் போவது யூரின் போவது விபச்சாரி ரெட லைட் இதெல்லாம் காட்டினால் கூடுதல் மதிப்பெண்!!
 •  20Hz-2000Hz வரை பல்வேறு அலைவரிசைகளில் (frequency ) பேச வேண்டும்."யப்பா செத்த அவுரு தொண்டையில நீலகிரி தைலம் தேச்சு விட்டா தேவல" என்று சொல்ல வைக்க வேண்டும்!!
 • யாராவது ஒரு காட்சியிலாவது அம்மணமா நிக்கணும்!!ஆண்கள் நிப்பது இப்போதைய Trend.(ஒரு வேலை Gay club இல உள்ளவர்கள் இத்தகைய காட்சிகளை வைத்து தங்களின் "தாகத்தை" தனித்து கொள்கின்றனரோ?
 • சமீபத்தில் அவன் இவன் அம்மண சீன,ஜாக்கி ஷ்ராப் அம்மண சீன.பாவம் ஜாக்கி ஷ்ராப்  ஊர்மிளாவ வெறும் பனியனோடு ஓடவிட்டு ஆங்கிள் பாத்து ரசித்தவரை  இங்க கொண்டு வந்து இப்படி அசிங்கபடுத்திபுட்டேங்கலேடா!!செயங்கடா செய்ங்க!!

  7 கருத்துகள்:

  1. அறிவுக் கொழுந்து சார் நீங்க...கொன்னுட்டீங்க.

   பதிலளிநீக்கு
  2. ஹீ ஹீ ஹீ அடங்கப்பா ஜாக்கி ஷ்ராப் பத்தி சொன்னது லொல்லோ லொள்ளு!!

   பதிலளிநீக்கு
  3. எவன் கண்ணனுக்கு சாமி தெரியலையோ அவன் பொண்டாட்டி பத்தினி இல்லனு ஒரு வடிவேல் காமெடி வருமே அந்த மாதிரி தான் ஆரண்ய காண்டம் விசயமும்.. படம் பிடிக்கலனா அவனுக்கு உலக சினிமா பாக்கற ரசனை இல்லைன்னு சொல்றாங்க..

   பதிலளிநீக்கு
  4. @கருந்தேள்
   @சித்தார்த்
   @நரன்
   நன்றி. :)
   *
   @Castro Karthi
   அப்படிதான் விமர்சனங்கள் கட்டமைக்கபடுகிறது!ஒருவரின் கருத்தை மற்றவர் பிரதிபலிக்கவில்லைஎனில் அவர் முட்டாள் என அழைக்கப்படுவார் என பயந்து நீரோட்டத்தில் கலந்து விடுகின்றனர்!

   பதிலளிநீக்கு
  5. @viki
   ம்ம்ம்ம்ம்...... அம்மண அரசன் கதை போல.....

   பதிலளிநீக்கு
  6. //ஆரண்ய காண்டம் இல்லைன்னா அடுத்து ஒரு கிஷ்கிந்தா காண்டம் வராமலா போய்டும்//
   த்ரிஷா இல்லேன்னா திவ்யா....
   வித்தியாசமான சிந்தனை......
   Even I have the same Frequency....

   பதிலளிநீக்கு