ஞாயிறு, 3 ஜூலை, 2011

கார்பரேட் களவாணித்தனம்-1 (நிதி அமைச்சகத்தை உளவு பார்த்தல்)

கார்பரேட்டுகள் அல்லது எம் என் சி (எம்புள்ள எம் என் சில வேல பாக்குறான்.இது வழக்கமா கேக்கும் வசனம்.டுபுக்கு நிறுவனங்கள் கூட இரண்டு இடங்களில் மட்டும் கம்பனியை வைத்துகொண்டு எம் என் சி என தனக்குத்தானே அடைமொழி கொடுத்துகொள்கிறது(இந்த நேரத்தில் தமிழின தலிவரு ஞாபகம் வந்தா நான் பொறுப்பில்லை).1991 இஸ் ராஜீவ் மரணத்திற்கு பிறகு இந்தியா தாராளமயமாக்கபட்டது  .அதாவது எந்த கம்பெனி வேணும்னாலும் வந்து இந்தியாவை சொரண்ட வரிவிலக்கு லொட்டு லொசுக்கு எல்லாம் அரசே வழங்கும்.,ஒரு டவுசர் மட்டும் கொண்டுவந்தா போதும்.மிச்சத்தை அப்போதைய நிதி அமைச்சர் அமெரிக்க அடிவருடி முன்னாள் ஒலக வங்கி  ஊழியர்(இன்னும் 3000 $ பென்சன் வாங்குறார்) அவரும் ஊருல இருக்கும் களவாணிக்கேல்லாம்   ஆஜராகும் சிதம்பரமும் பார்த்துகொள்வர்.சிடுமூஞ்சி நரசிம்ம ராவ் இதுக்கு முழு எடுப்பு.(இந்த தாராளமயமாக்கவே  ராஜிவை சி ஐ ஏ முடித்ததுன்னும் சொல்லுவாங்க.நான் அந்த வெளையாட்டுக்கு வரவில்லை.டங்கன் காட் ஒப்பந்தம் பற்றியெல்லாம் கேக்க கூடாது).
1991 க்கு  முன்பே சுரண்டும் மொதலாளிகள் இருந்தனர் ஆனால் குறைவு.அம்பானி,டாடா,பிர்லா போன்றவர்கள்.அதன் பின் ஆப்பிளை காப்பியடித்தே பெரியாளான பில் கேட்சு முதல் பில்லு கிழிப்பவன் வரையில் இந்தியாவை சுரண்ட அனுமதிக்கப்பட்டனர்.
    இப்போது என்ன நிலைமை?அரசையே ஆட்டிவைக்கும் அளவுக்கு கார்பரேட்டுகள் வளர்ந்து  விட்டனர்.எந்த மந்திரி பதவிக்கு யார் வரணும் யார் வரக்கூடாது என்பதை முடிவெடுப்பதும் அவர்களே.(நீரா ராடியா உரையாடல்கள் ஒரு டிரைலர்தான். வெளியே வராத பல நீரா ராடியாக்கள் இன்னமும் உள்ளனர்).
    இப்போது சமீபத்தில் நிதி அமைச்சக அலுவலகத்தில் 16 இடங்களில் பபிள் கம் போன்று ஒட்டப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.அதை எடுத்தால் உள்ளே சிறிய அளவுக்கு சுவரில் துளை உள்ளதாம்.பிரணாப் முகர்ஜி ஐ பி இடம் இதை முதலில் சொல்லாமல் மத்திய வரி விதிப்பு ஆணையத்தை கூப்பிட்டு "எல்லாவற்றையும்" கிளியர் செய்து விட்டுதான் ஐ பி யை அழைத்துள்ளார்.கேட்டதற்கு "உளவெல்லாம்  ஒண்ணுமில்லை.யாரோ விளையாட்டாக ஒட்டியுள்ளனராம்" .அதென்ன  நிதி அமைச்சகமா இல்லை காலேஜா?கண்ட இடத்தில் பபிள் கம் ஓட்ட!
       உண்மை இரண்டு விதமாக இருக்கலாமென சொல்கின்றனர்.ஒன்று சோனியாவே தன அமைச்சர்களை உளவு பார்த்திருக்கலாம்.இரண்டு கார்பரேட்டுகள் உளவு பார்த்திருக்கலாம்.
      இதில் கார்பரேட்டுகள் உழவே பிரதானமாக இருக்கும்(ஏனெனில் பிரதமரே சோனியாவின் ரிமோட்டால் ஆட்டிவைக்கபடுபபவர்.அதனால் அவருக்கு  தெரியாமல் யாரும் எதுவும் செய்ய வாய்ப்பு மிக குறைவு) .யார் மந்திரியாக வரவேண்டுமேன்பதுவரை முடிவெடுக்கும் கார்பரேட்டுகள் அந்த மந்திரிகள் என்ன முடிவெடுக்கின்றனர் என்பதை தெரிந்துகொல்லாமலா இருப்பார்?
      இப்போது சின்ன வத்திபெட்டி அளவே உள்ள ஒரு சாதனம் உள்ளது.அதில் சிம் கார்டை சொருகிவிட்டு அறையில் வைத்துவிட்டால் உலகின் எந்த மூலையிலும் செல்போன் மூலம் ஒட்டுகேட்டுகொள்ளலாம்.அது தவிர குண்டூசி அளவு மைக், கேமரா என பல உளவு சாதனங்கள் சாதாரண மார்கெட்டிலேயே கிடைக்கின்றது.இது குறித்த விவரமான கட்டுரையை ரா முன்னாள் அதிகாரி பி.ராமன் இங்கே   எழுதியுள்ளார்.இவரின்  "நிழல் வீரர்கள்" என்ற புத்தகம் படித்திருக்கிறேன்.அதில் உளவு அமைப்புகளின் செயல்பாடுகள் விளக்கியிருப்பார்.
      சரி இதையெல்லாம் பயன்படுத்தி என்ன செய்வது?எப்படி இருந்தாலும் கார்பரேட்டுகளின் மக்கள் தொடர்பு அதிகாரி மூலமோ அல்லது ஊடகங்கள் மூலமோ அல்லது நிதி அமைச்சக அலுவலகத்தில் உள்ள எடுப்பு மூலமோ அமைச்சகத்தின் முடிவுகளை தெரிந்து கொள்ளலாமே.எதற்கு இந்த உளவு என கேக்கலாம்.
     இப்போது செய்தி கிடைப்பது பெரிய விசயமில்லை.தொழில்நுட்ப வசதியில் எப்படியும் அமைச்சக முடிவுகள் தெரிந்துவிடும்.ஆனால் அது எப்போது கிடைக்கிறது என்பதே கார்பரேட்டுகளுக்கு பல ஆயிரம் கோடி சொத்துமதிப்பை மாற்றி அமைக்க வல்லது.அதனாலேயே உடனடியாக அமைச்சக கூட்டத்தை உளவு பார்ப்பதன் மூலம் அதன் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
  இதனால் பங்கு சந்தையில் முதலீட்டு பங்குகள் (equity) மற்றும் முன்பேர சந்தையில்  (Futures & options) பல கோடி லாபம் பார்க்கலாம்.சாதாரண  ஒரு தனி முதலீட்டாளர் அதிகபட்சம் (அவர் போலி சாமியாராக இல்லாத பட்சத்தில்) சில ஆயிரம் ஈக்விட்டிகளையோ அல்லது சில ஆயிரம் முன்பேர  பங்குகளையோதான் வைத்திருப்பார்.ஆனால் நிறுவங்கள் பல ஆயிரம் ஈக்விடிக்களையும் லட்சகணக்கில் முன்பேர பங்குகளையும் வைத்திருக்கும்.அதனால் ஒரு பத்து பைசா வேறுபாடு கூட அவர்களின் சொத்துமதிப்பை  பல நூறு கோடி ரூபாய்  வரை  மாற்றிவிடும் .இதனாலேயே உளவு பார்த்ததென என்று கூறலாம்.அது மட்டுமன்றி போட்டி நிறுவனங்களின் நடவடிக்கை அதற்கு அரசு வழங்க உள்ள சலுகைகள் என பல நூறு தகவல்களை உளவு மூலம் பெற்று பயனடைந்திருப்பர்.வழக்கம் போல ஒன்னுமே நடக்கல என்று காங்கிரஸ் எல்லோரு வாயையும் மூடி விட்டது வாழ்க சன நாயகம்!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக