வியாழன், 14 ஜூலை, 2011

கார்பரேட் களவாணித்தனம்-2 (புற்றுநோயை பரப்புதல்)

கடலூர்(எனது சொந்த ஊர்) பெயர் பெற்றது கரும்பு சக்கரை பீச் இதெல்லாம் விட ஊர் உலகத்தில் தடை செய்யப்பட்ட தொழிர்சாலைகள்தான்.இப்போது சமீபத்தில் கெம்ப்ளாஸ்ட் நிறுவனம் மற்ற நாடுகள் மற்றும் மாநிலங்களில் நிறுவ மறுக்கப்பட்ட நிலையில் கடலூரை அடைந்தது.ஆட்சியாளர்களை "கவனித்ததில்" அனுமதி கிடைத்து தன பங்குக்கு ஊரை மாசு படுத்தி வருகிறது.இந்த நிலையில் சுற்றுசூழல் ஆர்வலர்கள் நடத்திய ஆய்வில் இந்த தொழிற்சாலைகளின் சுற்றுபுறத்தில் உள்ள காற்றில் புற்றுநோயை பரப்பும் உண்டாக்கும் ரசாயனங்கள் 2000 மடங்கு (Carcinogenic) கலந்திருப்பதாக குற்றம் சாட்டின.அப்புறம் நீரி(NEERI) அமைப்பு ஆய்வு கனிமொழியின் வீராவேச பேச்சு(நான் அப்பாவிடம் சொல்றேன்.அப்போதைய அமைச்சர்  மைதீன் கானிடம் சொல்றேன் blah blah)மக்களுக்கு சிறு நம்பிக்கையை உண்டாக்கியது.ஆனால் கார்பரேட்டுகள் +பணத்தின் முன்பு இதெல்லாம் எம்மாத்திரம்?
அப்படியும் பலரின் வற்புறுத்தலால் அந்த நிறுவனங்கள் சேர்ந்து அந்த தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களை புற்றுநோய் ஆய்வு முகாமுக்கு அழைத்தது.சரி ஏதோ செஞ்சி கிழிக்கபோராங்கன்னு பாத்தா கடைசியில் அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவரை "கவனித்து" யாரையும் பரிசோதனை செய்யாமல் யாருக்கும் புற்றுநோய் இல்லை என ஒரு அறிக்கையை வெளியிட வைத்தனர்.அது இப்போது வெளியே வந்து விட "வழக்கம் போல" ஊத்திமூடும் பணியில் தொழிற்சாலை முதலைகள்.
              ஆக இனி அந்த தொழிற்சாலைகள் வழக்கம் போல புற்றுநோயை பரப்பி கொண்டிருக்கும்.கேட்க ஆளில்லை.அப்படியே  யாரவது கேட்டால் இது போன்ற ஏமாற்று மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பூசி முழுகப்படும்.மக்கள் புற்றுநோய் வந்து செத்தால் இவர்களுக்கென்ன?கார்பரேட்டுகளுக்கு வேண்டியது மூன்று.
பணம் பணம் மற்றும் பணம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக