வியாழன், 21 ஜூலை, 2011

இந்தியாவை சுற்றும் வல்லூறு!!

ஹிலாரி கிளிண்டன் இங்கு வந்து என்னத்த கிழித்தார் என சிலர் கேட்கலாம்.ஆந்திர மாநிலத்தில் 1200   ஏக்கர் பரப்பளவில்ஒரு "முக்கிய புள்ளி" க்கு சொந்த மான இடத்தில் யுரேனியம் இருப்பதை கண்டுபிடித்தார்.ஆனால் நைசா அதை மறைத்துவிட்டார்!!அப்புறம் அது அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டது.ஆக இப்போது யுரேனியதுக்கு போட்ட அணுசக்தி ஒப்பந்தம் வேஸ்டு!!!இங்கே உள்ள யுரேநியமே போதுமானது.இதை அமெரிக்கா தெரிந்து கொண்டது.சின்ன வல்லூறு ஹிலாரி உடனே இங்க வந்து சீட்டுல துண்டை போடும் விதமாக இங்கு வந்து  போயுள்ளார்.அது தவிர இந்தியா தனது சந்தையை  இன்னும் அமெரிக்காவுக்கு நல்லா தொறந்து உடனுமாம்!!(இதென்னா ஏ படமா?)அப்போதான இன்னும் ஓட்டுக்கா  நாட்டை சுரண்ட  முடியும்!!!

          எல்லாத்துக்கும் மேலே அணு விபத்து இழப்பீடு சட்டத்தை இன்னும் நீர்த்து போக வைக்கனுமாம்.அப்போதான் அமெரிக்க பணம் கொழுத்த பண்ணிகள் நாட்டை சூறையாட முடியும்!!அமெரிக்க நிறுவனங்கள் அணு உலைகளுக்கான உபகரணங்களை வழங்கும்.அதன்மூலம் எதாவது அணு உலைகளில் விபத்து என்றால் இவர்கள் அதற்கு இந்திய அரசு நிர்ணயித்துள்ள 1000கோடி(முன்பு அது 500 கோடியாக இருந்து பின்னர் கடும் எதிர்ப்பினால் உயர்த்தப்பட்டது).ஆக இங்கு அணு உலை விபத்து ஏற்பட்டு பல லட்சம் மக்கள் இறந்தாலும் அமெரிக்க பண முதலைகள் அதற்கு ஒரு பைசா தரமாட்டார் என்பதையே ஹிலாரி கிளிண்டன் இங்கே சொல்லிவிட்டு போயுள்ளார்.இதை எதிர்க்க வக்கில்லாத அமெரிக்க அடிவருடி மன்மோகன் சிங் அரசு வழக்கம் போல இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு "ஆமாஞ்சாமி" போட்டிருக்கிறது.இதென்ன ஆச்சரியம்?ஏக்கெனவே டவ் கம்பெனி போபால் விஷ வாயு விபதுக்கே இன்னும் சரியான நீதியோ நிதியோ குடுக்கலியே!!மக்கள் அணு விபத்தில் செத்தால் அமெரிக்காவிலிருக்கும் ஒபாமா மற்றும் ஹிலாரி கூட்டத்துக்கு என்ன கவலை?தங்கள் பிள்ளைகளின் படத்தை காரிலோ அல்லது ஆபீசிலோ ஒட்டி வைத்து மகிழ்வர்(டிபிகல் ஹாலிவுட் கிளீஷே இது!!பிச்சைகாரன்  கக்கூசில் பிள்ளைகளின் போட்டோவை ஒட்டி வைத்து தடவுவான்.அமெரிக்க சனாதிபதி தனது மேஜையில் தன பிள்ளைகளின்  போட்டவை வைத்து தடவுவார்.ஆமா இதென்ன உலக சாதனியா?புள்ளை  பெக்குறது?தலைய வலிக்குது இந்த காட்சியை பார்த்து!!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக