திங்கள், 18 ஜூலை, 2011

சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்துங்கள்

சமசீர் கல்வியை அமல்படுத்த உயர்நீதி மன்றத்தின் ஆணையை கோடி வணக்கத்தோடு வரவேற்கிறேன்.இதை கருணாநிதி கல்வின்னு பாக்காமல் மேல்முறையீடு செய்து மேலும் மூக்குடைபட்டுகொள்ளாமல் இப்போதே அமல்படுத்துங்கள் சமசீர் கல்வியை!!இது ஜெயா அரசுக்கு குட்டு கருணாநிதிக்கு ஷொட்டுனெல்லாம் சொல்லி மேலும் அரசியல் படுத்தாமல் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனே அமல்படுத்தவேண்டும் சமச்சீர் கல்வியை.
       சமச்சீர் கல்வியை அமல்படுத்த மறுக்கும் தனியார் பள்ளிகள் மற்றும் நைசாக சி பி எஸ் இ ஆக மாற்ற முயலும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். மற்றும் பழைய பாடத்திட்ட  புத்தகத்துக்கென பல ஆயிரம் பிடுங்கிய காசை திரும்ப வழங்க அரசு உத்தரவிட வேண்டும்.இதை மறுக்கும் எந்த பள்ளியின்  அங்கீகாரத்தையும் அரசு  ரத்து செய்துவிடலாம்!
     பல ஆயிரம்  பள்ளி(கொள்ளை) கட்டணத்துக்கும்  அரசு ஒரு முற்றுபுள்ளி வைக்க இதுவே சரியான நேரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக