வியாழன், 19 மே, 2011

1200 கோடி வீண் !!

என்னத்த சொல்ல 1200 கோடி மக்கள் வரிப்பணத்துல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் வியர்வையில் (சில தொழிலாளர்களின் மரணத்தில்) கட்டப்பட்ட புதிய சட்டசபை வளாகம் வாஸ்து சரியில்லைன்னு சில மூட ஜோதிடர்கள் கூறியதாலும் வீண் வீம்பாலும் ஜெயலலிதா பயன்படுத்த மாட்டேன் என்று கூறிவிட்டார்.அப்போ 1200 கோடி மக்கள் வரிப்பன செலவுக்கு என்ன பதில் சொல்றீங்க!!நீங்க 2001 -2006 முதல்வராக இருந்த பொது புதிய சட்டசபை வளாகம் கட்ட கூறிய காரணம் பழைய சட்டசபை வளாகம் ராணுவத்துக்கு சொந்தமான இடமென்பதால் அவர்கள் திரும்ப கேட்கின்றனர்.அதனால் புதிய சட்டசபை கட்ட வேண்டிய நிர்பந்தம்னு அண்ணா பல்கலைய சூறையாட பார்த்தீங்க(நான் உட்பட எல்லா மாணவர்களும் கையெழுத்து இயக்கம் நடத்தி அதை அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அனுப்பினோம்.அதனால் அந்த இடம் தப்பித்தது!)அப்புறம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்படும்னு சொல்லப்பட்டது.பின் உங்கள் ஆட்சி முடிந்து கருணாநிதி முதல்வராகி இந்த புதிய வளாகத்தை கட்டினார்!
        இப்போ ஓங்க வீண் ஜம்பத்தினால் அங்கு போகவில்லை!அல்லது மூடநம்பிக்கை காரணம்.பேசாம நீங்க  ஆளாளுக்கு சொந்த பணத்துல ஆளுக்கொரு சட்டசபை கட்டிகிங்க!ஓங்க இஷ்டப்படி வாஸ்து கூஸ்து தோஸ்துன்னு எல்லா மூடநம்பிக்கைகளையும் அங்கு பின்பற்றிகுங்க.மக்கள் வரிப்பணத்துல விளையாடாதீங்க!அப்புறம் கருணாநிதி பாதி கட்டிய கோயம்பேடு பேருந்து நிலையத்த நீங்க ஏன் முடிச்சி தொறந்தீங்க?ஒ அது மக்கள் பயன்பாடு.என்ன வாஸ்து மன்னன்கட்டி கேடுன்னாலும் மக்கள்தான பாதிக்கபடபோறாங்கன்னா?நீங்க திருந்திட்டதா சிலர் சொல்றாங்க!இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக