சனி, 7 மே, 2011

திருந்தமாட்டீங்களா?

ஒசாமாவுக்கு சென்னை மசூதிகளில்  ஜனாஸா எனப்படும் சிறப்பு  தொழுகை நடத்தியிருக்கின்றனர் இங்குள்ள இஸ்லாமியர்கள்.திருந்தமாட்டீங்களா?ஒங்க குரான்ல அடுத்த மனிதன கொல்ல சொல்லி எங்குமே எழுதப்படலை.அது உங்களுக்கும் தெரியும்.ஆனா அமெரிக்க ரெட்டைகோபுர தாக்குதல விடுங்க(அதான் ஒங்களுக்கு அமெரிக்கா மீது கோபம் உண்டு.அதை ஒப்புகிறேன்)ஆனா ஒன்னுமே அறியாத டான்சானியா போன்ற நாடுகளில் நடந்த குண்டு வெடிப்புகளில் அங்குள்ள அப்பாவி கறுப்பின மக்கள் நூற்றுகணக்கில் கொல்லப்பட்டனரே அதை நீங்கள் என்ன ஞாயம் சொல்லி மறுக்க போகிறீர்கள்?ஸ்பெயின்,மற்றும் ஆப்ரிக்க நாடுகள் பலவற்றிலும் கடந்த பத்தாண்டுகளில் ஒசாமா தலைமையில் நடந்த குண்டு வெடிப்புகள் பல ஆயிரம் உயிரை பலி வாங்கியிருக்கிறது.அதை ஞ்யாயபடுத்துகிரீர்களா?
           குரான் படி ஒரு ஆண் நாலு பெண்களுக்கு ஞாயமான வாழ்கை கொடுக்க முயுமெனில் அவன் அவர்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறது.ஆனால் ஒசாமா 20 பொண்டாட்டிகளுக்கு மேல் வைத்திருந்தானாம்!(உடனே சில மத பித்தன்கள் நீங்க கல்யாணத்தப்போ உடனிருந்தீர்களா என பித்துக்குளித்தனமா  கேள்வி கேப்பதை என்ன சொல்ல?அப்போ நீங்க கடவுளை(எந்த மத கடவுளானாலும்) பக்கத்துல இருந்து பாத்தீங்களா?)அப்போ குரான்படி வாழாத ஒசாமா எப்படி ஒரு இஸ்லாமியனாக கருத முடியும்?பல்லாயிரகணக்கான உயிர்களை பலி கொண்ட இவனின் குண்டு வெடிப்புகள் இஸ்லாமை மீறிய செயல்கள் என்பதை எந்த முஸ்லீமும் ஒப்பு கொள்வர்.அப்படி இருக்கும்போது அவனுக்கு தொழுகை நடத்துவது மத பித்தா இல்லை என்னவென்று சொல்ல?
   இதில் சிலர் ரெட்டைகோபுர தாக்குதலுக்கு ஒசமாதான் காரணம் என்பதை நிரூபித்தால் நாங்களே அண்ணா சாலையில் வைத்து கொல்வோம் என்கின்றனர்(ஆமா நீங்க கூப்பிட்ட உடனே அவன் அண்ணா சாலை வந்துடுவான் பாரு!!!அதான் இங்க கசப்புக்கு தெனம் ரெண்டு கோடி செலவுல தண்டம் அழுகுரான்களே!!).ரெட்டை கோபுரம் தாக்குதலுக்கு ஒசாமாவே பொறுப்பேற்றான்.இது தவிர பல ஆப்ரிக்க நாடுகள் குண்டு  வெடிப்புக்கும் இவனே பொறுபேற்றான்  .சும்மா எல்லாத்துக்கும் மத சாயம் பூசாதீங்க.இப்படிதான் லட்சகணக்கா ஷியா முஸ்லீம்களை கொன்ற சதாம் ஹுசேனை ஆதரித்தனர் சில அறிவிலிகள்.கொஞ்சமாவது அறிவுபூர்வமா சிந்திங்க .உணர்சிவசபட்டா இப்படிதான் மூளை கொழம்பும்.வெய்யகாலம் வேற!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக