செவ்வாய், 24 மே, 2011

கே.பியின் காமெடி பேட்டி

குமாரன் பத்மநாபனின் பேட்டியை நேற்று சி என் என் ஐ பி என் இல் ஒளிபரப்பினார்கள.என்னடா தேர்தல் பிரசார காமெடிகள் ஓய்ந்துவிட்டதே என்ற கவலையை போக்க இது உதவியது.எனக்கெனவோ வடிவேலுவின் பிரசாரம் நினைவுக்கு வந்தது.
பிரபாகரன் திமுகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவராம்.அடங்கப்பா!.தார்மீக ஆதரவோ பைசா காசோ  கூட கருணாநிதி விடுதலைப்புலிகளுக்கு கொடுத்ததில்லையே!!கொடுத்ததெல்லாம்(ஆதரவும்,பணமும்) எம் ஜி ஆர் என தமிழர் அனைவருக்கும் தெரியும்(ஏ.சியில் குந்திகினு பெனாத்தும் வடநாட்டு ஊடகங்களுக்கு ஒரு கருமமும் இது பற்றி தெரியாது என்பது சொல்லி விளங்க வேண்டியதில்லை!).அது தவிர பிரபாகரன் பார்ப்பன எதிர்ப்பால் ஈர்க்கப்பட்டாராம்!!அதனால் அவர் ராஜிவை கொல்ல உத்தரவிட்டாராம்.அது தவிர ஜெயாவையும் கொல்ல முயற்சி செய்தும் சந்தர்பம் கிடைக்காததால் கொல்லளியாம்!!இதென்ன புது கதை!!அவுரு திருமணத்தை நடத்தியது ஒரு பார்ப்பன குருக்கள்னு இவிங்களுக்கு தெரியுமா?இல்லை குவாட்டரோ  கஞ்சாவோ அடிச்சிட்டு பெனாத்தும் திருமணத்தை நேரில் பார்த்த கே பிக்கு தெரியாதா?
       ராஜபக்சேவை சர்வதேச போற்குற்ற்வாளியாக அறிவிக்க வேண்டுமென ஜெயா சென்ற வாரம் கூறியிருந்தார்.இதை மாற்றி ஜெயாவை தாஜா செய்யத்தான் இது போன்ற விஷம பேட்டிகள் ஒளிபரப்பபடுகின்றன என்பதுதான் உண்மை.இதில் ராஜபக்சேவின் பங்குதான் அதிகம்.அது தவிர எப்போதும் ராஜபக்சேவுக்கு சொம்பு தூக்கும் இந்தியாவின் தமிழின விரோத காங்கிரசு பற்றி சொல்ல வேண்டியதில்லை.!!!
        வடநாட்டு ஊடகங்களோ பத்திரிக்கையோ அல்லது அந்த மக்களோ என்றுமே  தமிழர்களையோ அவர்களின் உணர்வுகளையோ புரிதுகொண்டதில்லை.புரிந்துகொள்ளவும் போவதில்லை என்பதற்கு இந்த பேட்டியை ஒளிபரப்பியதே சான்று!!
         உடனே ஜெயாவும் எனக்கு எப்போதும் கொலை மிரட்டல் இருந்துள்ளதுன்னு சைடு வாத்தியம் வாசிக்கிறார்.இவர் வீட்டு முன்பு எவனையோ செட் செய்து கல் வீச செய்து இதை செய்தது புலிகள் என சொன்னவர்தான் ஜெ !ஐயோ புலி அந்தோ  புலி!! என அவரின் ஊடகமும் தொடர்ந்து சொல்லிவந்துள்ளது.அது சரி பார்ப்பனர்களின் புத்தி வடநாட்டு மக்களின் புத்தியோடு ஒன்றியுள்ளது என்பதற்கு இதே சான்று!!
         2001 -2006 இல் கடற்கரையில் ஏதாவது ஷூ சாக்சு மிதந்து வந்தாலும் "ஐயோ இது பிரபாகரனின் ஷூ" என சொல்லி வந்தது ஜெயா டிவி என யாரும் மறந்திருக்க மாட்டார்.
          இப்போது இந்த துரோகி கே பியின் பேட்டி உலக அரங்கை தன மீதிருந்து திசை திருப்பவே ராஜபக்சே கோஷ்டி செய்யும் லீலை  என்பது மூளை உள்ளவர்களுக்கு விளங்கும்
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக