சனி, 14 மே, 2011

தேர்தல் முடிவு சில துளிகள்!!

*தமிழின விரோத காங்கிரசு வெறும் அஞ்சு இடங்களே பெற்றது(தப்பாச்சே!!நான் எதிர்பாத்தது முட்டை!!)
*என்ன வேணும்னாலும் ஊழல் பண்ணிட்டு பணம் குடுத்து ஓட்ட வாங்கலாம்னு நெனச்சதுக்கு இதுவும் வேணும்.இனி எவரும் இப்படி செய்ய துணிய மாட்டார்கள்(என்று நம்புவோம்!)!
*திமுக முக்கிய அமைச்சர்கள் பெரும்பாலானோர் அவுட்டு (க.அன்பழகன் இந்த வயசுல பெரிய வில்லிவாக்கம் தொகுதிய குடுத்து இப்படி தோல்விய பாக்க வெச்சிட்டாங்க!!.)
*திமுக எதிர்கட்சி பொறுப்பை இழந்தது.
*வடிவேலுவின் நாரவாய் பேச்சுகளால் பைசா உபயோகம் இல்லைன்னும் அவரை பார்க்க கூடிய கூட்டத்தை ஓட்டாக மாறும்னு நெனச்ச திமுகவுக்கு முகத்துல கரி(இதேதான் குசுபுவுக்கும்)
*ஒரு பக்கம் காங்கிரசுடன்  கூட்டணி மறுபக்கம் இலங்கைதமிழர் இனவொழிப்பு ,தமிழக மீன்வர்கள படுகொலைக்கு மத்திய மற்றும் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்னு டபுள் ஆக்டு குடுத்த குருமாவளவனின் கட்சி ஒரு இடம் கூட பெறவில்லை!!
*"நான் இடம்பெறும்  கூட்டணியின் பிரதான கட்சிதான் ஆட்சிய பிடிக்கும்"னு பல வருசமா ரீல் வுட்டுகினு நெறைய சீட்டு வாங்குன பாமாகவுக்கு ஆப்பு!
*சாதியை நம்புன கட்சிகள் அவுட்டு.(பாமக முக்கியமாக)
*திருமங்கலம் பார்முலா அவுட்டுன்க்னா!!
*அஞ்சாநெஞ்சனின் மதுரையில் பத்தில் ஒரு எடம் மட்டுமே திமுக வாங்கியுள்ளது.எனவே வேற நல்ல பேரா யோசிங்க!!
*கேபிள் அரசுடமை ஆகிடும்னு  பயந்து விஜயகாந்த இழிவு படுத்துன சன் டிவி "தலைக்கு மேலே வெள்ளம் போனா சான் என்ன முழம் என்ன"ன்னு நேற்று ஜெயா ஜெயித்த காட்சிகளையும் விஜயகாந்த் எதிர்கட்சி  தலைவராகிரார்னும் காட்டியது.தினகரனும் சேர்த்துதான்!
*மிக முக்கியமாக கொளத்தூரில் "ப சிதம்பரம் பாணியில்" ஸ்டாலின் ஜெயித்ததாக மிகுந்த இழுத்தடிப்புக்கு,தகராறுகளுக்கு பிறகு  அறிவிக்கபட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக